சந்திரோதயம் அழகுதான் சூர்யோதயமும் அழகுதான் மொட்டவிழ்ந்து பூ பூக்கும் தருணம் மகத்தான அழகுதான் கையை உயர்த்தி காலை உதறி உடலை குறுக்கி சோம்பல் முறித்து முகத்தை சுருக்கி கண்ணை சிமிட்டி - பின் என்னைப் பார்த்து சிரித்தபடி என் மகள் கண் விழிக்கும் தருணத்திற்கு இவையெல்லாம் ஈடாகுமா?