Tuesday, November 16, 2010

நீயின்றி...



பின்மாலை நேரம்
பேய் மழைமேகங்கள்
பெய்தொழிந்த பின்னே
பேரமைதி!

ஏதோ விசும்பல் சத்தம் கேட்க
விட்டத்தை வெறித்த பார்வையின்
மட்டத்தை தாழ்த்திப் பார்த்தேன்!
உனது அழைப்பின்றி
சீந்தவும் ஆளின்றி
அழுது வீங்கிய கன்னத்தோடு
எனது அலைபேசி...
என்னைப் போலவே!

6 comments:

Unknown said...

கவிதை நல்லா இருக்கு.

எங்க ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

Mugilan said...

ரொம்ப நன்றி கலாநேசன்!
சில பல அலுவலக மற்றும் தனிப்பட்ட காரணங்களால் பதிவிட முடியவில்லை! இனி தொடர்ந்து எழுத முற்படுகின்றேன்!

சுபத்ரா said...

@ Mugilan

சூப்பர் கவிதை.. கலக்குங்க! WELCOME BACK!!!!!! :-)

Mugilan said...

நன்றி சுபத்ரா! :-)

தோழி said...

சிறப்பாக இருக்கிறது.. உங்கள் கவிதைகள் எல்லாமே தனித்தன்மையோடு மிளிரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

Mugilan said...

மகிழ்ச்சி தோழி!

Post a Comment