ஓர் ஊரையே ஆக்கிரமிக்க முடியுமா?
அப்படித்தான் தோன்றியது
அவள் என் இதயத்தை நிறைத்தபோது!
மின்மினி வெளிச்சத்திற்கு
கண்கள் இரண்டும் குருடாகுமோ?
அப்படித்தான் தோன்றியது
அவள் என்னைப் பார்த்தபோது!
ஒரேயொரு நீர்த்துளி
சூரியனுக்கே மைனஸ் டிகிரி குளிர் தருமோ?
அப்படித்தான் தோன்றியது
அவள் என்னோடு பேசியபோது!
தென்றல் காற்று - ஒரு
பனைமரத்தை வேரோடு சாய்த்திடுமோ?
அப்படித்தான் தோன்றியது
அவள் என்னைத் தீண்டியபோது!
அணில் மூச்சின் வெப்பம் - ஒரு
காட்டையே கொளுத்தி முடிக்குமோ?
அப்படித்தான் தோன்றுகின்றது
அவளைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு கணமும்!
8 comments:
நல்ல கவிதை
அருமை
fantastic
மின்மினி வெளிச்சத்திற்கு
கண்கள் இரண்டும் குருடாகுமோ?
அப்படித்தான் தோன்றியது
அவள் என்னைப் பார்த்தபோது!//////////
superb :)
@ வேலு, திகழ், சம்பத்குமார் , ஜெ.ஜெ
வாழ்த்திய உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!
தோழா.. உங்களை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன். அழைப்பை ஏற்று எழுதவும்.
http://kirukkalgal-jj.blogspot.com/2010/12/blog-post_24.html
நன்றி.
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_11.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment