Wednesday, February 24, 2010

ஊசிமுனை சரித்திரம்










வாய்ப்புகள் கதவைத் தட்டிய தருணத்தில்
காதினை இறுக மூடிக் கொண்டேன்
தேவதைகள் அப்படியே ஆகட்டும் 
எனக் கூறிய பொழுதில்   
என்னை நானே சபித்துக் கொண்டேன்!
பட்டாம்பூச்சியென சிறகடிக்க வேண்டிய பருவத்தில் 
பட்டுக்கூட்டினுள் அடைபட்டுக் கிடந்தேன்
ஒரு ஊசி முனையில் மாத்திரம் - என் 
சரித்திரம் எழுதி வைத்தேன்

2 comments:

ராமலக்ஷ்மி said...

//வாய்ப்புகள் கதவைத் தட்டிய தருணத்தில்
காதினை இறுக மூடிக் கொண்டேன்!
தேவதைகள் அப்படியே ஆகட்டும்
எனக் கூறிய பொழுதில்
என்னை நானே சபித்துக் கொண்டேன்!//

அருமையான வெளிப்பாடு.

//பட்டாம்பூச்சியென சிறகடிக்க வேண்டிய பருவத்தில்
பட்டுக்கூட்டினுள் அடைபட்டுக் கிடந்தேன்!//

ம்ம்.

//ஒரு ஊசி முனையில் மாத்திரம் - என்
சரித்திரம் எழுதி வைத்தேன்!//

அற்புதம். வாய்ப்புகளைத் தவறவிட்ட பின்னே ஊசிமுனையில் எழுத மாத்திரமே இருக்கும் சரித்திரம்.

கவிதை மிக நன்று.

Mugilan said...

விரிவாக கருத்து தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் பல ராமலக்ஷ்மி!

Post a Comment