காதல் கவிதைகள்
உணர்ந்து உருகி
படைத்துவிட்டு
அவற்றின்
பொருளானவளைத்
தேடித் தவித்தல்
ஒரு சுகம்!
தனிமையை உணர்த்தும்
மாரிக்கால மாலையில்
பேர் தெரியாத
ஒரு மழலை
சிந்திச் சென்ற
பிரியச் சிரிப்பு
ஒரு சுகம்!
அவசரமாய் அலுவலகம்
செல்லும் காலை நேரம்
சாலையோரம்
பேருந்திற்காக காத்திருக்கும்
இளம்பெண்ணின்
மின்னல் பார்வை
ஒரு சுகம்!
சிறுவயதில்
பொருள் தெரியாமலே
பரிச்சயமான
ஒரு கண்ணதாசன் பாடல்
இன்று அர்த்தம் விளங்குகையில்
ஒரு சுகம்!
எதிர்பாராத தருணங்களில்
மொட்டவிழும்
சின்ன சின்ன சுகங்களின்
சுகந்தங்கள்!
12 comments:
good one
நன்றி சௌந்தர்! :-)
அட!சின்னச் சின்ன ஆசை!
உக்காந்து யோசிப்பாயிங்களோ :-/
@அருணா
//அட!சின்னச் சின்ன ஆசை!//
அது மாதிரிதாங்க! இங்க சின்ன சின்ன சுகங்களைப் பத்தி லேசா முயற்சி செஞ்சிருக்கேன்! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அருணா!
@ராதை
//உக்காந்து யோசிப்பாயிங்களோ//
ஆமாம் ராதை! யோசிச்சுத்தான் எழுத வேண்டியிருக்கு! நான் என்ன கவியரசரா, காட்சியை சொன்ன உடனே எழுதித் தள்ள... :-)) .. ஏதோ உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் தர்ற ஊக்கத்துலதான் எப்பவாவது எழுத முடியுது! மிக்க நன்றி!
நீங்க சொன்னதெல்லாமும் அனுபவித்திருக்கிறேன் ....
ஆனா ...
ஒருபோதும் கவிதையா வந்ததில்லை உணர்வுகள் ...
வாழ்த்துக்கள் முகிலன் ...
--------------------------------------
advt.
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நியோ!
//சிறுவயதில்
பொருள் தெரியாமலே
பரிச்சயமான
ஒரு கண்ணதாசன் பாடல்
இன்று அர்த்தம் விளங்குகையில்
ஒரு சுகம்!///
உண்மை தான்... இது பல விசயங்களுக்கு பொருந்தும்..
தங்களுடைய தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி!
//காதல் கவிதைகள்
உணர்ந்து உருகி
படைத்துவிட்டு
அவற்றின்
பொருளானவளைத்
தேடித் தவித்தல்
ஒரு சுகம்!//
இது போன்ற காதல் கவிதைகளை
வாசிக்கும் போது எழும்
காதல் உணர்வுகள் ஒரு சுகம் ...........
நன்றி ராஜா!
Post a Comment