Sunday, July 4, 2010

நீ சிரித்திருக்க ...

அன்பே! 
உன் பூவிதழ் புன்னகையை 
கண் சிமிட்டாமல் காண்பேன்! 
நீ சிரிக்கையில் குறுகும் உன் கார்விழியை  
காலமெல்லாம் காண விரும்புவேன்!
உன் சிரிப்பினைப் பாதுகாக்க 
எப்போதும் முயல்வேன்!
அத்தகைய முயற்சிகள் 
சில சமயங்களில் 
உன்னை அழ வைக்கவும் கூடும்!   

4 comments:

தனி காட்டு ராஜா said...

அன்பை நீங்கள் அழ வைக்கலாமா ?அன்புக்கு பெரும்பாலும் அழ வைத்து தானே பழக்கம்???

Anonymous said...

பாவம்.. யார் அந்த பொண்ணோ?

Mugilan said...

ராஜா, ராதை! வருகைக்கு மிக்க நன்றி! :)

sathishsangkavi.blogspot.com said...

//நீ சிரிக்கையில் குறுகும் உன் கார்விழியை
காலமெல்லாம் காண விரும்புவேன்!//

அழகான வரிகள்....

Post a Comment