Tuesday, April 6, 2010

முழுமை




தூக்கி எறிந்த காகிதத்தில் 
பறந்து போன ஒரு கவிதையைப்போல்

தகித்து தணிந்த அடுப்பினில்
எரியாத ஒரு விறகு துண்டைப்போல் 

யாரும் கேட்காமல் வானொலிப்பெட்டியில் 
வழியும் ஒரு தேனிசையைப்போல்

ஓடி விளையாட மழலையரின்றி 
வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு பூங்கவைப்போல் 

முழுதாய் பயன்படுத்த மிக முயன்றும் 
முற்றாய் சிறப்பதில்லை வாழ்க்கை!

8 comments:

பத்மா said...

நீரூற்றி அணைத்த அடுப்பினில்
எரியாத ஒரு விறகு துண்டைப்போல்

அணையாத ஒரு விறகு துண்டுபோல்

அப்படின்னு இருக்கணுமா?

நல்லா இருக்கு கவிதை

Mugilan said...

நுட்பமான திருத்தம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி பத்மா!

Anonymous said...

கலக்கல் கவிதை முகிலன்.. :)

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு முகிலன்.

//யாரும் கேட்காமல் வானொலிப்பெட்டியில்
வழியும் ஒரு தேனிசையைப்போல்//

இந்த வரிகள் மனசை என்னவோ செய்கிறது..

Mugilan said...

நன்றி ராதை!

Mugilan said...

மிக்க நன்றி ராஜாராம்! என் கவிதைகளுக்கு தாங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்தால் மிகவும் மகிழ்வேன்!

ராமலக்ஷ்மி said...

//யாரும் கேட்காமல் வானொலிப்பெட்டியில்
வழியும் ஒரு தேனிசையைப்போல்//

இந்த வரிகள் எனக்கும் பிடித்தன.

Mugilan said...

ரொம்ப மகிழ்ச்சி ராமலக்ஷ்மி!

Post a Comment