Wednesday, April 14, 2010

கடவுள் ஏமாந்தான்!


கூர்காது கொண்ட மானைப் பிடிக்க சிங்கத்துக்குத் தெரியும் - சிங்கத்திடம்
தோற்காது, பாய்ந்தோட மானுக்கும் தெரியும்!
நெளிந்து ஓடும் பாம்பைப் பிடிக்க வல்லூற்றுக்குத் தெரியும் - வல்லூற்றிற்கு 
இரையாகமல் ஒளிந்து ஓட பாம்பிற்கும் தெரியும்!
வழுக்கிடும் விலாங்கைப் பிடிக்க நாரைக்குத் தெரியும் - நாரையிடம் 
தன்னை இழக்காமல் நீந்திச் செல்ல விலாங்கிற்கும் தெரியும்!

இந்த பிழைப்பு விளையாட்டைப் பார்த்து பார்த்து
கடவுள் சலித்திட்டான்!
வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என இழைத்து இழைத்து - ஒரு
உயிரினத்தை படைத்திட்டான்!
மனித இனம் எனப் பெயரிட்டான் - தன்
ஆறாவது அறிவை விரும்பி தந்திட்டான்!
உழைத்த களைப்பினில் கடவுள் கொஞ்சம் தூங்கிப் போனான்
விழித்துப் பார்த்த கடவுள் விக்கித்து நின்றான்!

இங்கே!
விலங்கைப் போல மனிதனும் பிழைத்தே கிடந்தான்!

21 comments:

துபாய் ராஜா said...

வார்த்தைகளும், வர்ணனைகளும் அருமை.

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Mugilan said...

நன்றி துபாய் ராஜா! இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

மரா said...

//இங்கே!
விலங்கைப் போல மனிதனும் பிழைத்தே கிடந்தான்!//

இதுதான் நிதர்சனம்.. கவிதை நன்று.

prince said...

survival of the fittest சார்ல்ஸ் டார்வின்இன் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை அழகிய கவிதை வடிவில் படைத்துள்ளீர்கள் அருமை.

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

Anonymous said...

//விழித்துப் பார்த்த கடவுள் விக்கித்து நின்றான்!

இங்கே!
விலங்கைப் போல மனிதனும் பிழைத்தே கிடந்தான்!//

என்ன அருமையான வரிகள்! நுட்பம் வாய்ந்த உங்கள் கவிதைகள் அனைத்தும் படிப்பவர் நெஞ்சில் 'தங்கி' நிற்பவை.

தொடரட்டும் உங்கள் படைப்புகள்.. நன்றி!

VISA said...

Good one!!!

Mugilan said...

@மயில்ராவணன்
//இதுதான் நிதர்சனம்.. கவிதை நன்று//

மிக்க நன்றி மயில்ராவணன்!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

Mugilan said...

@ப்ரின்ஸ்
//survival of the fittest சார்ல்ஸ் டார்வின்இன் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை அழகிய கவிதை வடிவில் படைத்துள்ளீர்கள் அருமை.
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி ப்ரின்ஸ்!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

Mugilan said...

@ராதை
//என்ன அருமையான வரிகள்! நுட்பம் வாய்ந்த உங்கள் கவிதைகள் அனைத்தும் படிப்பவர் நெஞ்சில் 'தங்கி' நிற்பவை. //

மிக்க நன்றி ராதை!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

Mugilan said...

@VISA
//Good one!!!//

மிக்க நன்றி விசா!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

மதுரை சரவணன் said...

//இங்கே!
விலங்கைப் போல மனிதனும் பிழைத்தே கிடந்தான்!//
அருமையான வரிகள்

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ந‌ன்பரே...

நாடோடி said...

Word verification - யை நீக்கி விடுங்க‌ள்... அப்போது தான் பின்னூட்ட‌ம் போட‌ வ‌ச‌தியாக‌ இருக்கும்.

அன்புட‌ன்
ஸ்டீப‌ன்

மணிஜி said...

சிலருக்கு ஐந்து அறிவையும்,ஆறாவது அறிவுக்கு பதில் செல்வத்தையும் கூட கொடுத்து விடுகிறான்..

வால்பையன் said...

தூக்கும் போது கடவுள் டவுசரை மனிதன் கிழித்து விட்டான் என முடித்திருக்கலாம்!

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பா.

Mugilan said...

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் ...

மதுரை சரவணன்

பனித்துளி சங்கர்

நாடோடி

மணிஜீ

வால்பையன்

முனைவர்.இரா.குணசீலன்

ஆகியோர்க்கு என் மனமார்ந்த நன்றிகள்!

Jayabalaji said...

Very good one Rajesh...

Mugilan said...

@Jayabalaji
//Very good one Rajesh...//

Thank you Jay Bee!

அண்ணாமலை..!! said...

அருமையான கவிதை நண்பரே!

Mugilan said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணாமலை!

Post a Comment