சில்லென்ற குளிர் 
சலனமில்லாத கடல் 
தும்ம வைக்காத காற்று 
தூரத்து மழை மேகங்கள் 
வெப்பம் காட்டாத சூரியன் 
வெளிர்நிற லில்லி மலர்கள் 
வேகமான ரயில் போக்குவரத்து 
விதிகளை மீறாத சாலைப்போக்குவரத்து
பாசிநிறக் கண்கொண்ட பாவையர் 
பளிங்குநிற மேனிகொண்ட பதுமைகள் 
இடுங்கிய கண்கள் கொண்ட  சீனப் பெண்டிர் - அதுவும் 
இல்லையெனத் தோன்றும் அவர் சிரிக்கையிலே 
ரோஜா மொட்டென மழலைகள் - ஏழு 
ராகம் சிந்தும் அவர் பேசுகையிலே 
வெறிச்சோடிய ரயில் நிலையங்கள் 
வெட்கத்தில் நனையாத முத்தங்கள் 
கேளிக்கை விடுதிகள் 
கொண்டாட்ட விடுமுறைகள் 
பூலோக சொர்கந்தான் சிட்னி 
பூமகளே நீ அருகில் இருந்தால்! 
5 comments:
//இடுங்கிய கண்கள் கொண்ட சீனப் பெண்டிர் - அதுவும்
இல்லையெனத் தோன்றும் அவர் சிரிக்கையிலே //
அருமை. அருமை
நல்லா இருக்கு...
அங்கேயுமா சீனப்பெண்டிர்?....
உங்களின் அந்த பூமகள் யாரோ?
@ கலாநேசன்
//அருமை. அருமை//
நன்றி கலாநேசன்
@ தஞ்சை வாசன்
//நல்லா இருக்கு...
அங்கேயுமா சீனப்பெண்டிர்?....//
ஆமாம் தஞ்சை வாசன்! சிட்னியில் சீன மக்கட்தொகை மிக அதிகம்! சிங்கப்பூரைப்போல் இன்றி மரியாதை தெரிந்த சீனர்கள்! வாழ்த்தியமைக்கு நன்றி!
"" பூலோக சொர்கந்தான் சிட்னி
பூமகளே நீ அருகில் இருந்தால்! ""
சிட்னி மட்டுமல்ல முகில் அண்ணா ..,
ஆவறவர் பூமகள்கள் அருகிலிருக்கும் தருணம்
அனைத்து இடமும் சொர்க்கம் தான்...!!
உங்கள் வரிகளை ரசித்த பின் தான் தோன்றியது...
நீங்கள் ரசித்தவை தான் வரிகளாக வந்துள்ளன என்பது...!!
Post a Comment